Apr 21, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் வீட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி விபச்சாரக் கொடுமை: தஞ்சாவூர் பெண்கள் 4 பேர் மீட்பு; மனிதக் கடத்தல் கும்பல் கைது
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் வீட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி விபச்சாரக் கொடுமை: தஞ்சாவூர் பெண்கள் 4 பேர் மீட்பு; மனிதக் கடத்தல் கும்பல் கைது

Share:

மலேசியாவில் நல்ல ஊதியத்தில் வீட்டுப் பணிப்பெண் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழ்நாட்டிலிருந்து பெண்களை வரவழைத்து கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பலை ஜோகூர் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த 4 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

'பெர்சத்துவான் கெபாஜிகான் இக்லாஸ் மலேசியா' என்ற அரசு சார்பற்ற அமைப்பின் தலைவர் ஜோர்ஜ் வில்சன் சவரி, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ஜோகூர் லார்க்கின் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதன் அடிப்படையில், ஜோகூர் மசாய் பகுதியில் உள்ள இம்பியான் செனிபோங் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 தமிழகப் பெண்கள் மீட்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு வலுக்கட்டாயமாகப் போதை மாத்திரைகள் வழங்கப்பட்டதாகவும், நிர்வாணக் கோலத்தில் தங்களைப் படம் எடுத்து, அவற்றை தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டியே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட மதுபான இன்னிசை விடுதி உரிமையாளரான மலேசிய ஆடவர் ஒருவரும், அவருக்குத் துணையாக இருந்த சாந்தி மகேந்திரன் என்ற இந்தியப் பிரஜை மற்றும் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் கைதான சாந்தி என்பவர், ஏற்கனவே மனிதக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட 4 பெண்களும் தற்போது போலீஸ் பாதுகாப்பில் உள்ளனர். அவர்கள் விரைவில் தாயகம் திரும்புவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related News

மானிய டீசல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: சிலாங்கூரில் இரண்டு லாரிகள் பறிமுதல்; இருவர் கைது

மானிய டீசல் கடத்தல் முயற்சி முறியடிப்பு: சிலாங்கூரில் இரண்டு லாரிகள் பறிமுதல்; இருவர் கைது

செராஸ் கலவரம்: 33 பேருக்கு 10 மாத சிறைத் தண்டனை - உயர் நீதிமன்றம் அதிரடி

செராஸ் கலவரம்: 33 பேருக்கு 10 மாத சிறைத் தண்டனை - உயர் நீதிமன்றம் அதிரடி

கூலிம் போலீஸ் கைது நடவடிக்கை சர்ச்சை: விதிமுறைகளை மீறிய அதிகாரியின் மீது அதிரடி விசாரணை!

கூலிம் போலீஸ் கைது நடவடிக்கை சர்ச்சை: விதிமுறைகளை மீறிய அதிகாரியின் மீது அதிரடி விசாரணை!

பினாங்கு  கல்லறையில்  அநாகரீகச் செயல்: தம்பதியின் சிறைத் தண்டனையை குறைத்தது உயர் நீதிமன்றம்

பினாங்கு கல்லறையில் அநாகரீகச் செயல்: தம்பதியின் சிறைத் தண்டனையை குறைத்தது உயர் நீதிமன்றம்

வெளிநாட்டுத் தொழிலாளர் நேரடி வேலைவாய்ப்பு முறை: இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை - மனிதவள அமைச்சு விளக்கம்

வெளிநாட்டுத் தொழிலாளர் நேரடி வேலைவாய்ப்பு முறை: இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை - மனிதவள அமைச்சு விளக்கம்

சிலாங்கூர் மருத்துவச் செலவுகள் 25 விழுக்காடு வரை உயரும் அபாயம்: விநியோகச் சிக்கலால் மருந்துகள் விலை அதிகரிக்க வாய்ப்பு

சிலாங்கூர் மருத்துவச் செலவுகள் 25 விழுக்காடு வரை உயரும் அபாயம்: விநியோகச் சிக்கலால் மருந்துகள் விலை அதிகரிக்க வாய்ப்பு