Jul 1, 2026
Thisaigal NewsYouTube
குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!
தற்போதைய செய்திகள்

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.19-

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகத் தனிச் சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றை அமைப்பது குறித்த பரிந்துரையை சட்டத்துறை தலைமை அலுவலகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டத்துறைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டுசுகி மொக்தார், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது தற்போதைய சட்டக் கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும் என்றும், அதன் செயல்திறனை உறுதிப்படுத்த விரிவான ஆய்வுகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், புதிய தீர்ப்பாயம் அமைப்பதற்குப் பதிலாக இணக்க முறையைப் பயன்படுத்துவது விரைவான, சிக்கனமான தீர்வாக இருக்கும் என மலேசிய முஸ்லீம் வழக்கறிஞர்கள் சங்கம் பரிந்துரைத்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதே முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Related News