ஜோகூர் பாரு, அக்டோபர்.05-
ஜோகூரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ரோன்95 பெட்ரோல் விநியோகம் குறைந்து விட்டதாகப் பரவிய செய்தியை ஜோகூர் மாநில உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு மறுத்துள்ளது. சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், நிலத்தடி தொட்டியில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே சில 'nozzle'கள் அகற்றப்பட்டன என்று அதன் ஜோகூர் மாநில இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா பொர்னோமோ உறுதிச் செய்துள்ளார். இது பெட்ரோல் தட்டுப்பாடு அல்ல, மாறாகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குழப்பம் ஏற்படாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார். பிற எட்டு பம்புகள் சாதாரணமாகச் செயல்படுவதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.








