Oct 3, 2026
Thisaigal NewsYouTube

BMW காருடன் வாகனம் மோதம் ஆடவர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
BMW காருடன் வாகனம் மோதம் ஆடவர் மரணம்

மாராங், நவம்பர்.06-

BMW ரக காரருடன் புரோட்டோன் வீரா கார் நேருக்கு நேர் மோதியதில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். புரோட்டோன் வீரா காரை செலுத்திய 34 வயது ஃபாடில் அஹ்மாட் என்பவர் கடும் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் மாராங், ஜாலான் மாராங் – புக்கிட் பாயோங் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

ஒரு கட்டுமானத் தொழிலாளியான உயிரிழந்த நபர் செலுத்திய புரோட்டோன் வீரா ரகக் கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து நிலையில் எதிரே வந்த BMW ரக காருடன் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று மாராங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சொஃபியான் ரெட்ஸுவான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →