ஜோகூர் பாரு, டிசம்பர்.23-
நகரப் பேருந்து ஒன்று, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லோரியுடன் மோதியதில் மூன்று பயணிகள் காயமுற்றனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணியளவில் ஜோகூர்பாரு, பூசாட் பண்டாரை நோக்கிச் செல்லும் பந்தாய் லோடோ, ஜாலான் ஸ்கூடாய் 3.5 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
64 வயது ஓட்டுநர் செலுத்திய அந்த நகரப் பேருந்து, கூடாயிலிருந்து பூசாட் பண்டாரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோரியுடன் மோதியதாக ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
இதில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பிய போதிலும் 45, 63 மற்றும் 73 வயதுடைய மூன்று பயணிகள் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.








