Jul 1, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் தொழிலாளர்களுக்கு ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் மாற்று பொதுவிடுமுறை
தற்போதைய செய்திகள்

சரவாக் தொழிலாளர்களுக்கு ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் மாற்று பொதுவிடுமுறை

Share:

சரவாக் மாநிலத்தில், பல அரசு விடுமுறைகள் ஒரே நேரத்தில் வருவதால், அம்மாநில தொழிலாளர்களுக்கு வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாற்று பொதுவிடுமுறைகள் வழங்கப்பட உள்ளன.

வரும் மே 31-ஆம் தேதி விசாக தினமும், அதனைத் தொடர்ந்து ஜூன் 1-ஆம் தேதி மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் பிறந்தநாளும், கவாய் தயாக் திருவிழாவின் முதல் நாளும் ஒரே நாளில் வருவதால், இந்த மாற்று விடுமுறைகள் அறிவிக்கப்படுவதாக சரவாக் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

அதேவேளையில், கவாய் தயாக் இரண்டாம் நாளானது, வரும் ஜூன் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தொழிலாளர் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 76), பிரிவு 104(1)ன் படி, மாமன்னரின் பிறந்தநாள் கட்டாய பொதுவிடுமுறையாக இருப்பதால், அதற்கு பதிலாக வேறு நாளை வழங்க முடியாது என்றும் தொழிலாளர் துறை விளக்கமளித்துள்ளது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

சரவாக் தொழிலாளர்களுக்கு ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில் மாற்று ப... | Thisaigal News