Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஏர்சியா எக்ஸ் சேவைகள் 2027-க்கு ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

ஏர்சியா எக்ஸ் சேவைகள் 2027-க்கு ஒத்திவைப்பு

Share:

மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் நீண்ட கால புவிசார் அரசியல் உறுதியற்ற தன்மையைக் காரணம் காட்டி, கோலாலம்பூர் - பஹ்ரைன் - லண்டன் கேட்விக் சேவைகளைத் தொடங்குவதை ஏர்சியா எக்ஸ் நிறுவனம் 2027 மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

பஹ்ரைன் வழியாக இயக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்தச் சேவைகள் ஆகஸ்ட் 27, 2026 முதல் ஒத்திவைக்கப்படுவதாகவும், பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுக் கருத்தாய்வுகளே நிறுவனத்தின் முன்னுரிமை என்றும் "நீண்ட தூர பயணத்திற்கான மலிவு விலை கட்டண விமான" நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் நீடிக்கும் உறுதியற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏர்சியா எக்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி பென்யமின் இஸ்மாயில் தெரிவித்தார்.

பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே மிக உயர்ந்த முன்னுரிமை என்றும், பிராந்தியத்தில் சேவைகளைக் குறைத்துள்ள பிற விமான நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, முழுப் பணத்தைத் திரும்பப் பெறுவது அல்லது 730 நாட்கள் செல்லுபடியாகும் credit கணக்கு வடிவில் பணத்தைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட சேவை மீட்பு விருப்பங்கள் வழங்கப்படும் என ஏர்சியா எக்ஸ் அறிவித்துள்ளது. மேலும், பயணிகளின் பயணத் திட்டங்களில் ஏற்பட்ட தடைக்கு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

Related News