Oct 16, 2026
Thisaigal NewsYouTube

மூதாட்டியை மடக்கி தங்கச்சங்கிலி பறிப்பு : 4 பெண்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூதாட்டியை மடக்கி தங்கச்சங்கிலி பறிப்பு : 4 பெண்கள் கைது

டிச.5-

கடந்த நவம்பர் 28 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, ஜாலான் செமங்காட் பிகேஎஸ் 13 இல் உள்ள சமிக்ஞை விளக்கு சாலை சந்திப்பில் மூதாட்டி ஒருவரை அழைத்துச் சென்று, அவரின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட கொள்ளை சம்பவம் தொடர்பில் நான்கு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

69 வயது மூதாட்டியிடம் தங்கள் கைவரிசையை காட்டியது தொடர்பில் கிடைக்கப்பெற்ற போலீஸ் புகாரின் அடிப்படையில் 30 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய உள்ளுரைச் சேர்ந்த நான்கு பெண்களை போலீசார் நேற்று கைது செய்ததாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார்

சம்பந்தப்பட்ட மூதாட்டி, தனது வீட்டின் முன் நின்று கொண்டு இருந்த போது, போலி எண் பதிவை கொண்ட கார் ஒன்று அவர் வீட்டின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கிய மூன்று பெண்கள், செர்டாங் பெர்டானாவில் உள்ள South City- யில் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாக கூறி அந்த மூதாட்டியை அழைத்துச் சென்றுள்ளனர்.

அந்த மூதாட்டியும் காரில் ஏறி செர்டாங்கிற்கு சென்றுள்ளார். அந்த மூதாட்டி காரை விட்டு இறங்கும் போது, மூவரில் ஒருவர் அந்த மூதாட்டியின் சங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டதாக நேற்றிரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →