Oct 1, 2026
Thisaigal NewsYouTube

27 குற்றப் பதிவுகளுடன் லாரி திருடியவர் – 100 கிலோமீட்டர் விரட்டிப் பிடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
27 குற்றப் பதிவுகளுடன் லாரி திருடியவர் – 100 கிலோமீட்டர் விரட்டிப் பிடிப்பு

ஜோகூர் பாருவில் லாரியைத் திருடிச் சென்றதாகக் கைது செய்யப்பட்ட 30 வயதுகளில் உள்ள ஆடவரை, வரும் சனிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாரியை திருடியதாகவும், போலீஸ் அதிகாரியின் கடமையைத் தடுத்ததாகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாகவும் அவர் மீது விசாரணை நடத்தப்படுகிறது. மேலும், போதைப்பொருள் வைத்திருந்தது மற்றும் போதைப்பொருளை உட்கொண்டது தொடர்பிலும் விசாரணை நடைபெறுகிறது.

முன்னதாக, ஜோகூர், பிளேந்தோங்கில் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட லாரியை அந்த ஆடவர் ஓட்டிச் சென்ற நிலையில், போலீசார் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று தஞ்சோங் லாங்சாட்டில் புதன்கிழமை காலை 10.20 மணியளவில் அவரைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான 35 விநாடி காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

அந்த ஆடவருக்கு ஏற்கெனவே 27 குற்றப் பதிவுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →