Jun 30, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய இந்து சங்கத் தலைவருக்கு எதிராக டிக்-டாக் பிரபலம் அவதூறு வழக்கு
தற்போதைய செய்திகள்

மலேசிய இந்து சங்கத் தலைவருக்கு எதிராக டிக்-டாக் பிரபலம் அவதூறு வழக்கு

Share:

தமது நற்பெயருக்குக் களம் விளைவித்ததாக, மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டி. கணேசன் மீது பிரபல டிக்-டாக் கலைஞர் 'இபு ஒலிவியா லோபஸ்' அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கணேசனின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளி தொடர்பாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவில், ஒலிவியா வழங்கி வரும் 'புஷ்ப அபிஷேகம்' அல்லது மலர் குளியல் சேவை ஏமாற்று வேலை என்றும், லாப நோக்கம் கொண்டது என்றும் தவறான கருத்துகள் பகிரப்பட்டதாக ஒலிவியா குற்றம் சாட்டியுள்ளார்.

'ஜெய் ஹனுமத்' எனும் பெயரில் சுமார் 2 லட்சம் டிக்-டாக் பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள ஒலிவியா, தாம் ஒரு சான்றிதழ் பெற்ற மருத்துவ ஹிப்னோதெரபிஸ்ட் என்று கூறியுள்ளார்.

இந்து சங்கத் தலைவரின் இந்த விமர்சனத்தால் தனது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இணையதள வாயிலாகப் பல விமர்சனங்களுக்கும் உள்ளாக நேரிட்டதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் மூலம், முறையான இழப்பீடு மற்றும் பகிரங்க மன்னிப்பைக் கோரியுள்ளார் ஒலிவியா லோபஸ்.

Related News