கோத்தா பாரு, நவம்பர்.19-
செயற்கைக் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி, ஐந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளந்தான், கோத்தா பாருவில் நிகழ்ந்த 5 கொள்ளைச் சம்பவங்களில் ஒருவரே ஈடுபட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவற்றுக்குப் பொறுப்பான அந்த போலீஸ்காரர் அடையாளம் காணப்பட்டதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் முகமட் யுசோஃப் மாமாட் தெரிவித்தார்.
ஏற்கனவே போதைப் பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையின் அந்த 43 வயது போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் வேளையில் அவர் கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது என்று முகமட் யுசோஃப் குறிப்பிட்டார்.
MPV ரோந்துப் போலீஸ்காரரான அந்த நபரை கைது செய்தது மூலம் அவரிடமிருந்து செயற்கை துப்பாக்கி ஒன்று கைப்பற்றுப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








