பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று தென் தாய்லாந்துக்கு ஒரு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார். மலேசியாவிற்கும் தாய்லாந்துக்கும் இடையிலான இருவழி ஒத்துழைப்பு தொடர்பாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரீதா தவிசின்- னை பிரதமர் அன்வார் சந்திக்கவிருக்கிறார்.
மலேசியாவின் வட பிராந்திய சோதனை சாவடி மையமான புக்கிட் காயு ஹிதம் - மையும் தாய்லாந்து, சடாக் என்ற பகுதியையும் இணைக்கும் குடிநுழைவு, சுங்கம் மற்றும் நோய்தடுப்பு சோதனை மையம் நிர்மாணிப்புத் திட்டம் குறித்து பிரதமர் அன்வார், தாய்லாந்து பிரதமருடன் முக்கியமாக விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் அன்வார், இன்று மலேசிய நேரப்படி நண்பகல் 12 மணியளவில் தாய்லாந்து, சடாக்- கை சென்றடைந்தார்.








