கோலாலம்பூர், ஜனவரி.17-
இன்று சனிக்கிழமை காலை 7.50 மணியளவில் இந்தோனேசியாவின் செராம் பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அதே வேளையில், Talaud தீவுகளுக்கு அருகே 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் அம்போன் பகுதியிலிருந்து வடகிழக்கே சுமார் 82 கிலோமீட்டர் தொலைவில், 36 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தினால், மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா அறிவித்துள்ளது.








