புத்ராஜெயா, ஆகஸ்ட்.28-
தனது 4 வளர்ப்பு மகள்களைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக 57 வயது நபர், அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
நீதிபதி என். பிரிஸில்லா முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபருக்கு எதிராக மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அலோர் ஸ்டார், தாமான் ஶ்ரீ இண்டா மற்றும் கம்போங் சுக்கா மெனாந்தி ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் 6 க்கும் 11 க்கும் இடைப்பட்ட வயதுடைய தனது நான்கு வளர்ப்பு மகள்களையும் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக கூடியபட்சம் 20 ஆண்டு, பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சட்டை எதிர்நோக்கியுள்ளார்.








