Sep 30, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பாருவில் மழை வெள்ளம்: 37 குழந்தைகள் உட்பட 44 பேர் மீட்பு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பாருவில் மழை வெள்ளம்: 37 குழந்தைகள் உட்பட 44 பேர் மீட்பு

Share:

ஜோகூர் பாரு, ஜாலான் முஹமட் அமீன் பகுதியில் உள்ள தடிகா & தஸ்கா உமிகு சாயாங் பாலர் பள்ளியில் மழை வெள்ளத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, 37 குழந்தைகள் மற்றும் 7 ஆசிரியர்கள் என 44 பேர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

அனைவரும் அருகிலுள்ள சூராவ் ஒன்றுக்கு படகு மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக நடவடிக்கைப் பிரிவு தலைவர் நாகிஷ் நெக்மாட் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மாலை 3.53 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்த நிலையில், 10 தீயணைப்பு வீரர்கள் 4.14 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Related News