கோலாலம்பூர், ஜூலை.18-
நீதிபதிகள் நியமனம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பொய்யான மற்றும் அருவருக்கத்தக்க உள்ளடக்கத்தைப் பதிவேற்றம் செய்த தனிநபரை எம்சிஎம்சி எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தீவிர விசாரணை செய்து வருகிறது.
இந்த விவகாரத்தில் தனிநபர் ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக எம்சிஎம்சி புகார் பெற்றுள்ளது. அதே வேளையில் அந்த தனிநபரிடம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக எம்சிஎம்சி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








