Jun 29, 2026
Thisaigal NewsYouTube
வேட்டையாடச் சென்ற போது விபரீதம்: ஆடவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வேட்டையாடச் சென்ற போது விபரீதம்: ஆடவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.02-

சபா மாநிலம், கோத்தா பெலூட் பகுதியில், வேட்டையின் போது மரத்திலிருந்து விழுந்து மாண்டதாகக் கூறப்பட்ட ஆடவர், உண்மையில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு, தனது நண்பருடன் உலு கூகூட் காட்டுப் பகுதியில் வேட்டையாடச் சென்ற 44 வயதான ஆடவர், மரத்திலிருந்து கீழே விழுந்து மாண்டதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த ஆடவர் துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்டு இறந்திருப்பதைக் கண்டறிந்ததாக கோத்தா பெலூட் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 35 வயது ஆடவரைக் கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு