May 22, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

Share:

கெனிங்கௌ, பிப்ரவரி 27 -

கெனிங்கௌ,கம்போங் பெனாகாத்தான் அருகில் உள்ள பெகாலான் ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் உடல் மீட்கப்பட்டது.

நேற்று இரவு 9:50 மணியளவில் 13 வயதுடைய "Aloysius Alfred" வின் உடல் காணாமல் போனதாக கூறப்பட்ட இடத்திலிருந்து 520 மீட்டர் தொலைத் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபரை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப் படையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக கெனிங்காவ் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்தின் தலைவர் ஷாருடி டிலாமின் தெரிவித்தார்.

பின் அந்த இளைஞனின் உடல் கரைக்கு கொண்டு வரப்பட்டதுடன் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஷாருடி டிலாமின் கூறினார்.

முன்னதாக, ஐந்து நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற "Aloysius" காணாமல் போனதாக நேற்று மாலை 5:50 மணியளவில் தீயணைப்பு, மீட்புப்படையினருக்கு அவசர அழைப்பு வந்ததாக ஊடகங்கள் அறிவித்திருந்தன.

Related News