Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சிறுமி மானபங்கம், புகாரை உறுதிச் செய்தது போலீஸ்

Share:

பத்தாங் காலி, பிப்.21-

சிலாங்கூர், பத்தாங் காலி, சுங்கை மாசீனில் உள்ள மஸ்ஜிட் ஜாமேக் பள்ளிவாசலில் இன்று காலையில் ஆடவர் ஒருவர், சிறுமி ஒருவரை பலவந்தமாகக் கட்டியணைத்து, மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் புகார் ஒன்றை பெற்றிருப்பதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் பைசால் தாஹ்ரின் உறுதிச் செய்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் விசாரணைக்குப் பின்னர் போலீசார் ஓர் அறிக்கையை வெளியிடுவர் என்று அகமட் பைசால் தெரிவித்தார்.

அந்த பள்ளிவாசலில் இன்று காலை தொழுகை நடைபெற்று கொண்டிருந்த போது, பெண்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு சந்தடியின்றி சென்ற ஆடவர் ஒருவர், சிறுமி ஒருவரைக் கட்டியணைத்து, பாலியல் சேட்டை புரிய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் அந்த பள்ளி வாசலில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி