Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கெப்போங்கில் 300 பி40 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி பற்றுச் சீட்டு
தற்போதைய செய்திகள்

கெப்போங்கில் 300 பி40 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளி பற்றுச் சீட்டு

Share:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கெப்போங்கில் வசிக்கும் பி40 பிரிவைச் சேர்ந்த 300 இந்தியக் குடும்பங்களுக்கு பற்றுச் சீட்டு வழங்கப்பட்டது. இதனை கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எடுத்து வழங்கினார்.

இந்தப் பற்றுச் சீட்டைக் கொண்டு அருகில் உள்ள 99 ஸ்பீட் மார்ட் கடைகளில் அடிப்படைத் தேவைக்கானப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். தற்போது அதிகரித்திருக்கும் வாழ்க்கைச் செலவினத்தை இதன்வழி மக்கள் சமாளிக்க உதவி புரியும் என வ் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் கீழ் மலேசிய இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவான மித்ரா ஆதரவில் அரசு சாரா அமைப்பான பெர்சத்துவான் கெபஜிக்கான் சென்யுமான் கசிஹ் கோலாலம்பூர் வழிநடத்தும் வெற்றி எனும் திட்டத்தை லிம் லிப் எங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

வெற்றி திட்டத்தின் வாயிலாக பெண் தொழில்முனைவோர் வாய்ப்பு, சமூக ஊடகங்கள் தொடர்புடைய பயிலரங்குகள், சதுரங்கப் பயிற்சி, படிவம் 4 , 5 மாணவர்களுக்கான மலாய் மொழி பயிற்சி, ஃபுட்சால் பயிற்சி, மின்னியல் விளையாட்டு வாயிலாக தன்முனைப்புப் பயிற்சி போன்றவை வழிநடத்தப்படும் என கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் தெரிவித்தது.

Related News