May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநிலத்தை அணுக்கமாக கண்காணித்து வருவேன்

Share:

நாட்டின் 17 ஆவது மாமன்னராக பதவியேற்கவிருக்கும் சூழலில், நாட்டின் ஆட்சியாளர் என்ற முறையில் ஐந்து ஆண்டு காலம் தாம் பொறுப்பில் அமர்ந்திருந்தாலும் ஜோகூர் மாநிலத்தின் நடவடிக்கைகள் அணுக்கமாக கண்காணிக்கப்படும் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார்நினைவுறுத்தியுள்ளார்.

ஜோகூர் மாநில அரசு கேந்திரம் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மாநில அரசு உட்பட பெம்பெசார்களும் ( Pembesar ), மாநில தலைவர்களும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கொள்ள வேண்டும் என்று சுல்தான் கேட்டுக்கொண்டார்.

தம்முடைய ஒரு கண்ணும், ஒரு காதும் எப்போதுமே ஜோகூர் மாநிலத்தின் மீது இருக்கும் என்று சுல்தான் நினைவுறுத்தினார்.

ஜோகூர் மாநிலத்திலிருந்து தாம் வொகு தொலைவில் இல்லை. ஜோகூர் மாநிலம் அணுக்கமாக கண்காணிக்கப்படும். ஒரு பகுதியில் பூனை வெளியே சென்று விட்டால், எலிகளுக்கு கொண்டாட்டம் என்ற நிலை இருக்கக்கூடாது என்று தமது முகநூலில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சுல்தான் அறிவுறுத்தியுள்ளார்.
மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி நாட்டின் 17 ஆவது மாமன்னராக 5 ஆண்டு காலம் பொறுப்பேற்கவிருக்கிறார்.

Related News

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!