Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மஸ்ஜிட் தானாவில் மாஸ் எர்மியாத்தியின் வெற்றியை ஒத்திவைக்க விண்ணப்பம் !
தற்போதைய செய்திகள்

மஸ்ஜிட் தானாவில் மாஸ் எர்மியாத்தியின் வெற்றியை ஒத்திவைக்க விண்ணப்பம் !

Share:

கடந்த 15 வது பொதுத் தேர்தலில் மச்ஜிட் தானா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற மாஸ் எர்மியாத்தியின் வெற்றியை ஒத்தி வைக்க வேண்டும் என்று தேசிய முன்னணியின் வேட்பாளர் அப்துல் ஹக்கீம் அப்துல் வாஹித் கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர விண்ணப்பித்துள்ளார்.

முன்னதாக, மாஸ் எர்மியாத்தியின் வெற்றியை தேர்தல் நீதிமன்றம் அவரது வெற்றியை உறுதிப்படுத்தி இருந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர விண்ணப்பிக்கப்பட்டிருப்பதை அப்துல் ஹக்கீம் இன் வழக்கறிஞர் நார்ஹாசிரா அபு ஹையான் கூறினார்.

தேர்தலின்போது, மாஸ் எர்மியாத்தி வாக்குகளைப் பெற மக்களுக்குப் பணம் கொடுத்திருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்திருப்பதாக அப்துல் ஹக்கீம் வழக்கு தொடுத்திருந்தார். ஆனால், சரியான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாய்ஜய்ஜால், அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டதாக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நீதிபதி அபு பகார் கத்தார் தீர்ப்பளித்தார்.

மேலும், மாஸ் எர்மியாத்திக்கு 50 ஆயிரம் வெள்ளி இழப்பீடாகக் கொடுக்கும் படியும் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News