ஈப்போ, டிசம்பர்.20-
பேரா, பாரிட் பகுதியில் உள்ள லாயாங்-லாயாங் கானான் தேசியப் பள்ளி அருகே கார் ஒன்று ஆற்றில் விழுந்ததில் 34 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம், இன்று சனிக்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் நிகழ்ந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அவசர அழைப்பைப் பெற்றது.
இதில் 34 வயது ஆடவர், செலுத்திய கார் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த ஆற்றில் விழுந்து மூழ்கியது. பாரிட் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
காரில் சிக்கியிருந்த ஆடவரைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகச் சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர். அந்த நபரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் நிலவிய இருள் அல்லது வழுக்கும் சாலை விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.








