பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி பினாங்கு மாநிலத்தில் நடைபெற உள்ளது.
பினாங்கு ஸ்பைஸ் அரேனாவில் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் புகழ் ஷிவாங்கி, ஸ்ரீ நிஷா ஆகியோருடன் நம் நாட்டு கலைஞரான பிக்போஸ் புகழ் முகேன் ராவ்வும் கலந்து கொள்ளவிருக்கிறார்.
டிசம்பர் மாதம் விடுமுறை காலம் என்பதால் அதிகமானோர் பினாங்கு மாநிலத்திற்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய சந்தோஷத்தைத் தரும் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ‘ஹெலோ கிரியேட்டிவ் ‘ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவமணி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து இணையம் மூலம் தொடர்பு கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய பாடகர் ஹரிஹரன், இரசிகர்கள் முழு திருப்தி அடைவதைத் தாம் உறுதி செய்வார் என குறிப்பிட்டார்.








