Sep 27, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பறித்  திருடனை மடக்கிப் பிடித்த ஓரியண்டல் கோபி உணவக ஊழியர்கள்: ஜோகூர் பாருவில் துணிகரம்
தற்போதைய செய்திகள்

வழிப்பறித் திருடனை மடக்கிப் பிடித்த ஓரியண்டல் கோபி உணவக ஊழியர்கள்: ஜோகூர் பாருவில் துணிகரம்

Share:

ஜோகூர் பாரு, ஏயோன் புக்கிட் இண்டாவில் உள்ள ஓரியண்டல் கோபி உணவகத்தில், வாடிக்கையாளரின் பையைப் பறித்துத் தப்ப முயன்ற திருடனை ஊழியர்கள் அதிரடியாகப் பிடித்துள்ளனர்.

உணவகத்தில் அமர்ந்திருந்த பெண்மணியின் பையை ஒரு நபர் திடீரெனப் பறித்துக் கொண்டு ஓட முயன்றார். இதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அந்தத் திருடனை மடக்கிப் பிடித்தனர். மீட்கப்பட்ட பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இக்கட்டான நேரத்தில் துணிச்சலாகச் செயல்பட்ட தனது ஊழியர்களை ஓரியண்டல் கோபி உணவக நிர்வாகம் பாராட்டியதோடு, பொதுமக்கள் பொது இடங்களில் உடைமைகள் மீது கவனமாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டது.

Related News