ஈப்போ, செப்டம்பர்.24-
தம்மை ஓர் இந்துவாக அங்கீகரிக்கக் கோரி, 26 வயது இளைஞர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்த ஈப்போ உயர் நீதிமன்றம், அந்த இளைஞர் ஓர் இந்துவே தவிர முஸ்லிம் அல்ல என்று தீர்ப்பளித்தது.
அந்த இளைஞர் ஒரு முஸ்லிம் என்பதற்கு எந்தவோர் ஆதாரமும் இல்லை என்று நீதிபதி பூபிண்டர் சிங் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
தம்மை ஓர் இந்துவாக அறிவிக்கக் கோரி, தேசிய பதிவு இலாகா மற்றும் பேரா மாநில இஸ்லாமிய சமய இலாகாவிற்கு எதிராக அந்த இளைஞர் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
பேரா மாநில சமய இலாகாவின் குறிப்பின்படி அந்த இளைஞர் இஸ்லாத்தில் தழுவியதற்கான எந்தவொரு சான்றும் இல்லை என்று சமய இலாகா அதிகாரி உறுதிப்படுத்தியிருப்பதையும் நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
தெலுக் இந்தானில் பிறந்து வளர்ந்தவரான அந்த இளைஞரின் தந்தை மதம் மாறிய போதிலும், ஓர் இந்துவான தாயாரின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார் என்பதற்கான ஆதாரம் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.








