Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜாலூர் கெமிலாங் கொடி தலைகீழாகக் கட்டப்பட்டது அறியாமல் நடந்த தவறாக இருக்கலாம்
தற்போதைய செய்திகள்

ஜாலூர் கெமிலாங் கொடி தலைகீழாகக் கட்டப்பட்டது அறியாமல் நடந்த தவறாக இருக்கலாம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-

ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியைக் கடைக்காரர் ஒருவர் தலைகீழாகக் கட்டியச் சம்பவம், அறியாமல் நடந்த தவறாக இருக்கலாம் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.

அந்தத் தவறு பல்வேறு எதிர்மறையான விவாதங்களுக்கு வித்திட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், எதற்காக இப்படிப்பட்ட சம்பவம் நிகழ்கிறது என்பதை உணர்ந்து, இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

தேசியக் கொடி தலைக்கீழாகக் கட்டப்படுவது வருத்தத்திற்குரிய ஒற்றாகும். அதே வேளையில் தேசியக் கொடி எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதை மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தேசியக் கொடியைத் தலைகீழாகக் கட்டிய தவற்றுக்காக கடைக்காரர் ஒருவர் மக்களிடம் நேற்று பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசியக் கொடி தலைகீழாகக் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்து அடுத்த நிமிடத்திலேயே கொடியைக் கீழே இறக்கி, சரி செய்வதற்குள், அதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து, அவசரக் கோலத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டார் என்று அந்தக் கடைக்காரர் தெரிவித்தார்.

எனினும் சமூக வலைத்தளங்களில் அந்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து தாம் போலீஸ்காரரால் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News