ஈப்போ, கிந்தா மாவட்டத்தில் உள்ள சிமிண்டு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த தொழிலாளி ஒருவர் சிமிண்டு துகளில் சிக்கி மாண்டார். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை பிற்பகல 3.15 மணியளவில் நிகழ்ந்ததாக பேரா மாநில வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளது.
இந்த தொழிலியல் விபத்தில் 26 வயதுடைய அந்நிய நாட்டுப் பிரஜை உயிரிழந்ததாக அவ்விலாகா அடையாளம் கூறியது. இறுகிப் போன சிமிண்டுகளை சுத்தியால் உடைக்கும் பணியில் சகப்பணியாளர்களுடன் அந்த தொழிலாளர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அத்துறை தெரிவித்தது.
சிமிண்டு துகளில் சிக்கி அந்த நபர் மீட்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.








