கோலாலம்பூர், அக்டோபர்.29-
அரசு ஊழியர்களாகக் கருதப்படக்கூடிய பொதுச் சேவை ஊழியர்களை அவமதிக்க வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆளும் கட்சி சேர்ந்த எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்த எதிர்மறையான வேலையைச் செய்ய வேண்டாம் என்று அவர் நினைவுறுத்தினார்.
அரசாங்க ஊழியர்களை அவமதிக்கும் செயலில் எந்தவொரு எம்.பி.யும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் இன்று மக்களவையில் நினைவுறுத்தினார்.








