Apr 3, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள்  சலுகை: ஏப்ரல் 15 முதல் அமல்
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் சலுகை: ஏப்ரல் 15 முதல் அமல்

Share:

அலுவலகத்திலிருந்து 8 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவில் வசிக்கும் அரசு ஊழியர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என பொதுப்பணித் துறை தலைமை இயக்குநர் வான் அகமது டஹ்லான் அறிவித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 15 முதல் கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் பிற மாநிலத் தலைநகர்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பொருந்தும்.

இதன்படி, கெடா, கிளாந்தான், திரெங்கானு ஊழியர்கள் திங்கள் முதல் புதன் வரையிலும், மற்ற மாநில ஊழியர்கள் செவ்வாய் முதல் வியாழன் வரையிலும் வீட்டிலிருந்து பணிபுரியலாம்.

எனினும், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த நேரடிப் பணியாளர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றுபவர்கள் ஒவ்வொரு மணிநேரமும் ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பில் தங்கள் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படாமல் இருப்பதை அந்தந்தத் துறைத் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News