கோலாலம்பூர் சுங்கை பீசி ராணுவ முகாம் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கெத்தும் நீர் வைத்திருந்ததாக ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் லிம் சுன் ஹாவ் கூறுகையில், சந்தேக நபரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, பல தோட்டாக்கள் மற்றும் கெத்தும் நீர் என சந்தேகிக்கப்படும் திரவம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுத சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக லிம் சுன் ஹாவ் தெரிவித்தார்.
சந்தேக நபர் முதலில் ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், அது மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, அக்டோபர் 8ஆம் தேதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ராணுவத்தின் ஆயுதக் கிடங்குகளில் உள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும் கணக்கில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆயுதப்படை தெரிவித்துள்ளது.








