Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மெதுவோட்டத்தில் அனைகுறை ஆடை, மூவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மெதுவோட்டத்தில் அனைகுறை ஆடை, மூவர் கைது

ஜோகூர்,அக்டோபர் 07-

ஜோகூர், கோத்தா திங்கியில் நடைபெற்ற மெவோட்டப் போட்டியில் அறைகுறை ஆடைகளுடன் பங்கெடுத்ததாக நம்பப்படும் மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநங்கைகள் உட்பட இந்த மெதுவோட்டத்தில் பங்கேற்றவர்கள் சிலர், அரை நிர்வாணக் கோலத்தில் காணப்பட்டதாக பரவலாக எழுந்த கண்டனப்புகாரைத் தொடர்நது முதல் கட்டமாக39 க்கும் 70 க்கும் உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட மூவரில் இருவர் அந்நிய நாட்டவர்கள் ஆவார் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார். மெதுவோட்டத்தின் போது அவர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் சிவப்பு, வெள்ளை நிறத்திலான அறைகுறை ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தங்களின் சுய விருப்பத்தின் பேரில் அந்த மூவரும் அறைகுறை ஆடைகளை அணிந்துள்ளதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக டத்தோ குமார் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →