Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசியா 80 விழுக்காடு 5ஜி தொடர்பு அலையின் இலக்கை எட்டும் – தியோ
தற்போதைய செய்திகள்

மலேசியா 80 விழுக்காடு 5ஜி தொடர்பு அலையின் இலக்கை எட்டும் – தியோ

Share:

மலேசியா இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 80 விழுக்காடு 5ஜி தொடர்பு அலையின் இலக்கை அடையும் சரியான பாதையில் உள்ளது.

கடந்த ஜூலை 31 நிலவரப்படி, நாட்டின் 5ஜி தொடர்பு அலை 66.8 விழுக்காடாக இருந்தது, அதே நேரத்தில் 4ஜி, 96.2 விழுக்காட்டை எட்டியுள்ளதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.

வணிக ரீதியான 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய பல நாடுகளுக்கு 5ஜி தொடர்பு அலையை வழங்குவதன் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளதாக தியோ நீ சிங் குறிப்பிட்டார்.

"நமது அன்றாட வாழ்வில் தொழில்நுட்பம் ஒரு முக்கியமான கருவி என்பது மிகவும் தெளிவாக உள்ளது. 2025 ஆம் ஆண்டளவில், மலேசியாவின் இலக்கவியல் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25.5 விழுக்காடு அல்லது அரை மில்லியன் வேலைகளை உருவாக்குவதுடன் 382 பில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக பங்களிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது."

"மலேசியர்களுக்கு ஒரு பெரிய வியாபாரச் சந்தையை உருவாக்குவதற்கு மடானி பொருளாதார கட்டமைப்பில் இலக்கவியல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வழி வணிகர்கள் உள்ளூர் சந்தையை மட்டும் எதிர்பார்த்து இருக்க வேண்டிய ஒரு சூழல் இருக்காது" என தியோ நீ சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News