Oct 8, 2026
Thisaigal NewsYouTube

கெந்திங் ஹைலேண்ட்ஸ் கொள்ளைச் சம்பவம்: சந்தேக நபர்கள் 7 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கெந்திங் ஹைலேண்ட்ஸ் கொள்ளைச் சம்பவம்: சந்தேக நபர்கள் 7 பேர் கைது

மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கெந்திங் ஹைலேண்ட்சில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1.7 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிக மதிப்புள்ள 2.5 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளிநாட்டினர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

25 முதல் 64 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பினாங்கு பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை கைது செய்யப்பட்டதாக பகாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் அஸ்ரி அக்மார் அயோப் தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஒருவர் கேஎல்ஐஏ விமான நிலையத்தின் மூலம் நாட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும், அவர் தற்போது தடுப்புக்காவலில் இருப்பதாகவும் அஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மற்ற 6 பேரும் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் முக்கிய சந்தேக நபருடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 395 மற்றும் 397-ன் கீழ் ஆயுதம் ஏந்திய கொள்ளை மற்றும் கும்பல் கொள்ளை குற்றச்சாட்டில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 17 -ஆம் தேதி, மூவர் கோடாரிகள் மற்றும் இரும்புக் கம்பிகளுடன் வணிக வளாகத்துக்குள் நுழைந்து 81 நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →