May 5, 2026
Thisaigal NewsYouTube
ஒருதலைப்பட்ச மதமாற்றத்திற்கு எதிரான இந்திரா காந்தியின் வழக்கு: மே 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்
தற்போதைய செய்திகள்

ஒருதலைப்பட்ச மதமாற்றத்திற்கு எதிரான இந்திரா காந்தியின் வழக்கு: மே 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.03-

கூட்டரசு அரசியலமைப்பின் 12(4) பிரிவின்படி, 18 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தையின் மதத்தை அவரது 'பெற்றோர் அல்லது பாதுகாவலர்' தீர்மானிக்கலாம் என உள்ளது. 2018-ல் இந்திராகாந்தி வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், 'பெற்றோர்' என்ற சொல் பன்மையாக Parents கருதப்பட வேண்டும் என்றும், தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் சம்மதமும் மதமாற்றத்திற்கு அவசியம் என்றும் கூட்டரசு நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதன் அடிப்படையில், ஜோகூர், பெர்லிஸ், மலாக்கா, கெடா, நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் கூட்டரசு பிரதேசங்களில் நடைமுறையில் உள்ள ஒருதலைப்பட்ச மதமாற்றச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என இந்திராகாந்தி வழக்கில் அவரின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய மன்றத்தின் வழக்கறிஞர்கள், மனுதாரர்களுக்கு இந்த வழக்கைத் தொடர எவ்வித அடிப்படை உரிமையும் இல்லை என்றும், அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத நிலையில் இந்தச் சவாலை முன்வைப்பது சட்டப்படி செல்லாது என்றும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று வாதிட்டனர்.

மேலும், மாநிலச் சட்டங்கள் மக்களின் தேவைகளைப் புரிந்து இயற்றப்பட்டவை என்பதால், அவை அரசியலமைப்பிற்கு உட்பட்டவை என்றே கருதப்பட வேண்டும் என்றும் பிரதிவாதிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டத்தோ அலிசா சுலைமான், இறுதித் தீர்ப்பிற்கான தேதியை உறுதிப்படுத்தினார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஒருதலைப்பட்ச மதமாற்றத்திற்கு எதிரான இந்திரா காந்தியின் வழ... | Thisaigal News