Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சீனி சட்டிசோறு உணவகத்தின் அடுத்தகட்ட நகர்வு சிங்கப்பூரை நோக்கி
தற்போதைய செய்திகள்

சீனி சட்டிசோறு உணவகத்தின் அடுத்தகட்ட நகர்வு சிங்கப்பூரை நோக்கி

Share:

மலேசியாவில் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் நாவுக்கு சுவையூட்டும் திருவிழா சாப்பாட்டிற்கு பிரசித்திப் பெற்ற சீனி சட்டி சோறு உணவகம், சிங்கப்பூரில் தனது முதலாவது உணவகத்தை திறக்கவிருக்கிறது.
இதன் திறப்பு விழா நாளை மறுநாள், மே முதல் தேதி திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் எண் 30, norris road, little india, சிங்கப்பூர் என்ற முகவரியில் முதல் முறையாக திருவிழா சாப்பாடு அறிமுகமாகிறது.
மலேசியாவில் 2018 ஆம் ஆண்டு தொடங்கி, வாடிக்கையாளர்களின் அபரிமித ஆதாரவினால், கடந்த 5 ஆண்டுகாலமாக வெற்றி நடைப்போட்டு 18 கிளை உணவகங்களைக் கொண்டுள்ள சீனி சட்டி சோறு, தனது 19 ஆவது கிளை உணவகமாக சிங்கப்பூரில் கால் பதிக்கிறது.
திருவிழா சாப்பாடு மற்றும் சட்டி சோற்றை ஒரு கைப்பார்ப்பதற்கு, சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திறப்பு விழா காண்கிறது சீனி சட்டி சோறு.

Related News