Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஈரானில் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஈரானில் மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கோலாலம்பூர், ஜூன்.19-

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மத்தியில் ஈரானில் உள்ள மலேசியத் தூதரகத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்ட மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள மலேசியத் தூதரகம் அங்குள்ள நடப்பு நிலையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

மலேசியாவிற்கு வெளியே உள்ள மலேசியர்களும், மாணவர்களும் பாதுகாப்பாக இருப்பது எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யப்படும். இதுவே விஸ்மா புத்ராவின் முன்னுரிமையாகும் என்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் மலேசியர்களுக்குத் தேவையான உதவிகள் நல்கப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →