Dec 2, 2025
Thisaigal NewsYouTube
போலீஸ் படைத் துணைத் தலைவர் ஆனார் அயோப் கான்
தற்போதைய செய்திகள்

போலீஸ் படைத் துணைத் தலைவர் ஆனார் அயோப் கான்

Share:

அரச மலேசியப் போலீஸ் படையின் துணிச்சல் மிகுந்த "சிங்கம்" என்று வர்ணிக்கப்படும் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை, போலீஸ் படைத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பதவி காலம் வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மாயில் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரச மலேசியப் போலீஸ் படையில் அதிகாரமிக்க உயரிய பதவியான துணைத் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள 57 வயதான அயோப் கான், போலீஸ் படையில் "திருவாளர் கைசுத்தம்" என்று புகழப்பட்டவர் ஆவார்.

தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறையின் புதிய சிஜடி இயக்குநராக பதவி வகித்து வரும் அயோப் கான், அரச மலேசிய போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்குப் பதிலாக அப்பதவியில் அமரவிருக்கிறார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமைகத்தின் பயங்கரவாதத் துடைத்தொழிப்பு பிரிவின் உதவி இயக்குநர், ஜோகூர் மாநில போலீஸ் தலைவர், போதைப் பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் ஆகிய பதவிகளை ஏற்றிருந்த அயோப் கான், கடந்த ஏப்ரல் மாதம் புக்கிட் அமானின் சிஐடி இயக்குநராக பொறுப்பேற்றார்.

இதனிடையே நாட்டின் புதிய IGB யாக டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் முற்பகுதியில் முன்கூட்டியே பணி ஓய்வுப் பெற விருக்கும் டான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானிக்கு பதிலாக அப்பொறுப்புக்கு ரஸாருடின் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News