Oct 18, 2026
Thisaigal NewsYouTube

புராதான கட்டமாக அங்கீகரிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புராதான கட்டமாக அங்கீகரிக்கப்பட்டது

சிலாங்கூர்,செப்டம்பர் 26-

நாட்டின் தாய்க்கோவிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கட்டடம், நாட்டின் புராதான கட்டடமாக அங்கீகரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் Jalan Tun H.S. Lee. யில் உள்ள 150 ஆண்டு கால வரலாற்றைக்கொண்ட ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் வளாகத்தை புராதான பகுதியாக 2005 ஆம் ஆண்டு தேசிய பாரம்பரிய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது..

இதற்கான அங்கீகார கடிதத்தை சுற்றலா, கலை, பண்பாட்டு அமைச்சின் தேசிய பாரம்பரிய இலாகாவின் பாரம்பரிய ஆணையம் வழங்கியுள்ளது என்று இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அறிவித்தார்.

புராதான கட்டட வளாகம் தொடர்பில் தேவஸ்தானத்தின் அனுமதி கேட்டு, ஓர் கடிதத்தை அந்த இலாகாவின் பாரம்பரிய ஆணையத்த்தின் ஆணையர் முகமது முடா பஹாடின் வழங்கியிருப்பதையும் அவர் டான்ஸ்ரீ நடராஜா சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

நவம்பர் 1 முதல் கியூஆர் பணப் பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? - நிதி அமைச்சு மறுப்பு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

மழையையும் பொருட்படுத்தாமல் 63,000 ரசிகர்களை ஈர்த்த சித்தி நூர்ஹாலிஸா இசை நிகழ்ச்சி: அன்வார் பாராட்டு

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

போராட்ட சூழல்: பிரான்ஸ் பயணத்தை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

புராதான கட்டமாக அங்கீகரிக்கப்பட்டது | Thisaigal News