Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சம்பந்த​பட்ட பிரமுகர்களின் பெயர்கள் அம்பலப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

சம்பந்த​பட்ட பிரமுகர்களின் பெயர்கள் அம்பலப்படுத்தப்படும்

Share:

​தேர்தல் காலத்தில் ​சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து லஞ்சமாக பெற்றது தொடர்பில் தனிநபர்கள் மற்றும் நிறுவன​ங்களின் 4 கோடி வெள்ளி வங்கிக் கணக்கை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் முடக்கியுள்ளது. இதில் டான்ஸ்ரீ மற்றும் டத்தோ ஸ்ரீ அந்தஸ்தைக் கொண்டவர்களும் அடங்குவர். சம்பந்தப்பட்டவர்கள் இவ்விவகாரம் தொடர்பில் எஸ்.பி.ஆர்.எம் முடன் ஒத்துழைக்கத் தவறுவார்களேயானால் அவர்களின் பெயர்கள் அம்பலப்படுத்தப்படும் என் அந்த ஆணையம் எச்சரித்துள்ளது.

சம்பந்தப்பட்ட டான்ஸ்ரீ மற்றும் டத்தோ​ ஸ்ரீ பிரமுகர்கள் கடந்த ஒரு வார காலமாக வெளிநாடுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது. புலன் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்க அவர்கள் முன்வர வேண்டும் என்றமெஸ்.பி.ஆர்.எம் நினைவுறுத்தியுள்ளது.

அந்த தனி நபர்கள் தற்போது அண்டை நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்கள் அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News