ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.22-
பினாங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பை மின்னல் தாக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது. குடியிருப்பின் மேல் மாடியிலிருந்த செங்கல் சுவர் இடிந்து விழுந்து, கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து டிக் டாக்கில் டானியல் சான் என்ற பயனர் பதிவிட்ட காணொளி, குடியிருப்புவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற உயரமானக் கட்டடங்களில் மின்னல் தாங்கிகள் பொருத்தப்பட்டிருந்தும், இச்சம்பவம் எப்படி நிகழ்ந்தது என பலரும் அப்பதிவின் பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.








