Jan 14, 2026
Thisaigal NewsYouTube
காரின் எண் பலகையை மாற்றி முறைகேடு செய்த நபருக்கு 9,000 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

காரின் எண் பலகையை மாற்றி முறைகேடு செய்த நபருக்கு 9,000 ரிங்கிட் அபராதம்

Share:

கூலாய், ஜனவரி.14-

ரோன்95 மானிய விலை பெட்ரோலை வாங்குவதற்காக தனது கார் பதிவு எண் பலகையை மாற்றிய குற்றத்திற்காக சிங்கப்பூர் நிரந்தரவாசி ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 9,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.

மானிய விலை பெட்ரோல் விதிமுறைகளை மீறியதற்காக இந்த அபராதமானது விதிக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Long Sa Kow என்ற 64 வயது முதியவர், கடந்த ஜனவரி 2-ஆம் தேதி, இரவு 10.30 மணியளவில், ஜாலான் ஜோகூர் பாரு-ஆயர் ஹீத்தாமிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

சிங்கப்பூரில் வசித்து வரும் Long , தனக்கு மலாய் அல்லது Mandarin மொழி தெரியாததால், குற்றச்சாட்டை ஆங்கிலத்தில் வாசித்துக் காட்டுமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, நீதிபதி ஆர். ஷாலினி முன்னிலையில், மொழிப்பெயர்ப்பாளர் மூலம் வாசிக்கப்பட்ட அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளானது, ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு இந்த அபராதமானது விதிக்கப்பட்டது.

Related News