சிரம்பான், ஜூலை.30-
தங்கும் வசதியைக் கொண்ட சமயப் பள்ளியின் 7 மாணவர்களை ஓரினப் புணர்ச்சி செய்த குற்றத்திற்காக அப்பள்ளியின் வார்டனுக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
38 வயது முகமட் கைரி ஃபிட்ரி பஹாரோம் என்ற அந்த வார்டனுக்கு எதிராக மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த வார்டன் ஒப்புக் கொண்டார்.
சிரம்பானில் உள்ள ஒரு சமயப் பள்ளியில் ஒன்பது முதல் 12 வயதுடைய 7 மாணவர்களுடன் அந்த வார்டன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








