Oct 16, 2026
Thisaigal NewsYouTube

எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகளைப் போல் நடித்த இருவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்.பி.ஆர்.எம். அதிகாரிகளைப் போல் நடித்த இருவர் கைது

பாசீர்மாஸ், நவ. 18-


தங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ஆள்மாறாட்டம் செய்த இரு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிளந்தான், பாசீர் மாஸ் பகுதியில் போலீசார் தொடங்கிய ஓப்ராசி தாரிங் வாவாசன் என்ற சோதனை நடவடிக்கையின் மூலம் 25 மற்றும் 31 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் தெரிவித்தார்.

பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலை அடிப்படையாக கொண்டு பாசீர் மாஸ், கம்போங் காசாவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அவ்விரு நபர்களும் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →