மலாக்கா, ஜூலை.29-
மலாக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவர் கல்வத் குற்றத்திற்காக மலாக்கா இஸ்லாமிய சமய இலாகாவினால் கைது செய்யப்பட்டார்.
இன்று பிற்பகல் 3.25 மணியளவில் மலாக்கா, செமாபோக், தாமான் செமாபோக் பெர்டானாவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சமய அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது தன் காதலியான பெண் மருத்துவர் ஒருவருடன் அந்த மருத்துவர் கல்வத் புரிந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த இருவரும் தங்கியிருந்த வீட்டின் கதவைத் திறப்பதற்கு அந்த மருத்துவ ஜோடியினர் 20 நிமிடம் எடுத்துக் கொண்டனர். 30 வயது மதிக்கத்தக்க அவர்கள், வீட்டின் கதவைத் திறக்க மறுத்து விட்டனர். பின்னர் போலீசாரின் உதவியைச் சமய அதிகாரிகள் நாடியதும், அந்த காதல் ஜோடியினர் வீட்டின் கதவைத் திறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








