நாட்டில் நீடித்து வரும் புகை மூட்டம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் மீதான அமைச்சர் நிக் நஸ்மி அஹ்மாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் புகைமூட்டம் விரைவில் மறையக்கூடும் என்று மலேசிய வானிலை இலாகாவான மெட் மலேசியா கணித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் காற்றின் தூய்மைக்கேட்டின் அளவு 24 மணி நேரத்திற்கும் கூடுதலாக 200 ஐபியு குறியீட்டை தாண்டினால் மட்டுமே செயற்கை மழையை வரவழைப்பதற்கான நடவடிக்கையில் சுற்றுச்சூழல் அமைச்சு ஈடுபடும் என்று அவர் விளக்கினார்.








