கோலாலம்பூர், செப்டம்பர்.11-
அந்நிய நாட்டவர்களை மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக அனுமதிப்பதற்கு உதவியதாக, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையைச் சேர்ந்த 18 அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதை அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஷுஹைலி முகமட் ஸையின் உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 1 மற்றும் 2-ல் பணியமர்த்தப்பட்டிருந்த அந்த 18 அதிகாரிகளும், எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், எஸ்பிஆர்எம்மின் விசாரணைகளுக்கு எல்லா வகையிலும் தாங்கள் உதவத் தயாராக இருப்பதாகவும், இது பற்றி எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஷுஹைலி முகமட் தெரிவித்துள்ளார்.








