May 24, 2026
Thisaigal NewsYouTube
சத்தம் போட்டதால் மூண்ட கைகலப்பு
தற்போதைய செய்திகள்

சத்தம் போட்டதால் மூண்ட கைகலப்பு

Share:

கோலா குராவ் ,ஆகஸ்ட் 19

தொழிலாளர் தங்கும் விடுதி ஒன்றில், மியான்மர், நேபாளம் என்ற இரு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கும்பலுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது நேபாளைச் சேர்ந்த 28 வயதான தொழிற்சாலை ஊழியர் ஒருவர் கூர்மையான பொருளால் குத்தப்பட்டு தாக்கப்ப்ட்டதில் உயிரிழந்தார்.

பேராக்,கோலா குராவ் அருகே நேர்ந்த அச்சம்பவம் குறித்து இன்று நள்ளிரவு 12.35 மணிக்கு அழைப்பு வந்ததை அடுத்து, நிகழ்விடம் சென்ற போலிஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சத்தம் போட்டதால் தொழிலாளர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியே சண்டைக்கான காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில்
கண்டறியப்பட்டிருப்பதாக கெரியன் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பரின்டன் ஜூனா யூசோஃப் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, அச்சம்பவம் குறித்து போலிஸ் 21 பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளது.

அதேவேளை, கைகலப்பிற்குப் பின் காணாமல் போன 38 வயது மியான்மார் தொழிலாளர் ஒருவரையும் போலிஸ் தேடி வருவதாக சூப்பரின்டன் ஜூனா யூசோஃப் கூறினார்.

Related News