பொந்தியான், பிப்ரவரி.22-
பொந்தியான், கம்போங் பாரிட் புகிஸ் பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் இன்று காலை ஒன்பது வயது சிறுவன் ஒருவன் தனியாக நின்றிருந்ததை அப்பகுதி மக்கள் கண்டறிந்துள்ளனர். காலை 8.34 மணியளவில் நனைந்த ஆடைகளுடன் காணப்பட்ட அந்தச் சிறுவன், தனது 65 வயது தந்தை ஆற்றில் விழுந்து காணாமல் போய் விட்டதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், தந்தையும் மகனும் அந்த ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தந்தை எதிர்பாராத விதமாக நீரில் விழுந்தது தெரிய வந்துள்ளதாக பொந்தியான் மாவட்டக் காவற்படைத் தலைவர் Superintendan Hadzrat Hussien Mion Hussain கூறினார்.
தற்போது தீயணைப்பு - மீட்புத் துறை, பொதுப் பாதுகாப்புப் படை, கடலோரக் காவல் படை ஆகியவை இணைந்து மாயமான தந்தையைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.








