Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தம்பினில் நிகழ்ந்த விபத்தில் இருவர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தம்பினில் நிகழ்ந்த விபத்தில் இருவர் பலி

தம்பின், ஜூன்.19-

எம்பிவி வாகனம் ஒன்று, மோட்டார் சைக்கிளை மோதிய விபத்தில் ஒரே இடத்தில் வேலை செய்த இரு ஆடவர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நேற்று இரவு 9 மணியளவில் தம்பின், கம்போங் பாரு சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது.

கடுமையானக் காயங்களுக்கு ஆளாகிய மோட்டார் சைக்கிளைச் செலுத்திய 32 வயது நபர், சம்பவ இடத்திலேயே மாண்டார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயது வங்காளதேச ஆடவர், தம்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில மணி நேரத்தில் உயிரிழந்தார்.

சமிக்ஞை விளக்குப் பகுதியில் பச்சை விளக்கு, மஞ்சள் நிறுத்திற்கு மாறி, சிவப்பு வண்ணத்திற்கு வந்தப் பின்னரும் முந்திச் செல்ல முனைந்த 34 வயது எம்பிவி வாகனமோட்டி, சாலையைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அமிருடின் சரிமான் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →